Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 371)

Paththati 13 - பராக பத்ததி

மாதஸ் ததா மாதவ பாதரக்ஷே த்வயி ப்ரஸக்தம் த்வரயா உபயாந்த்யாம் பராம்ருசேயம் பதவீபராகம் ப்ராணை: ப்ரயாணாய ஸமுஜ்ஜிஹாநை:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! எனது உயிர் பிரிகின்ற நேரத்தில் நீ மிகவும் வேகமாக அரங்கனை அழைத்துக் கொண்டு வருவாய். அப்போது உன் மீது படிந்துள்ள தூசிகள் அனைத்தையும், மேலே கிளம்பும் எனது ப்ராணன் நன்றாகத் துடைத்து உனக்குக் கைங்கர்யம் செய்யவேண்டும்.