Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 370)
Paththati 13 - பராக பத்ததி
ரங்கேச பாதஸஹதர்மசரி த்வதீயாந் மௌளௌ நிவேச்ய மஹிதாந் பதவீபராகாந் ஸந்த: த்ரிவர்க்க பதவீம் அதிலங்கயந்த: மௌளௌ பதம் விதத்தே விபுதேச்வரணாம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடன் எப்போதும் சேர்ந்ததே சஞ்சாரம் செய்யும் பாதுகையே! நன்கு அறிந்தவர்கள் உனது தூசிகளைத் தங்கள் தர்மம், அர்த்தம், காலம் (அறம், பொருள், இன்பம்) ஆகியவற்றைக் கடந்து செல்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தேவர்களின் தலைகளில் தங்கள் கால்களை வைக்கும்படி ஆகின்றனர். (தேவர்கள் கூட இவர்கள் கால்களில் விழுகின்றனர் என்று கருத்து)