Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 369)

Paththati 13 - பராக பத்ததி

அந்தே ததா த்வம் அவிலம்பிதம் ஆநயந்தீ ரங்காத் புஜங்கசயநம் மணிபாதரக்ஷே காமம் நிவர்த்தயிதும் அர்ஹஸி ஸம்ஜ்வரம் மே கர்ப்பூர சூர்ணபடலை: இவ தூளிபி: தே

இரத்தினக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! என்னுடைய மரணம் ஏற்படும் நேரத்தில் நீ சிறிதும் தாமதம் செய்யாமல், ஸ்ரீரங்க விமானத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெரியபெருமாளை அந்த இடத்திற்கு அழைத்து வரவேண்டும். அப்போது கர்ப்பூரத்தின் துகள்கள் போன்ற உன்னுடைய தூசிகள் என் மீது விழுந்தால், எனது வேதனைகள் முற்றிலுமாக மறைந்துவிடும்.