Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 368)
Paththati 13 - பராக பத்ததி
கங்காபகா தட லதாக்ருஹம் ஆச்ரயந்த்யா: பாதாவநி ப்ரசலிதம் பதவீ ரஜஸ்தே ப்ராயணே பாவநதமம் ப்ரணதஸ்ய சம்போ: உத்தூளநம் கிம் அபி நூதநம் ஆதநோதி
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமன் உன்னைச் சாற்றிக் கொண்டு கங்கையின் கரையோரமாக நடந்தான். அப்போது உன் மீதுள்ள தூசிகள் அனைத்தும் அந்தக் கரையில் உள்ள புதர்களில் படிந்தன. அந்தப் புதர்கள் அவற்றை எடுத்துத் தனது உடல் முழுவதும் பூசிக் கொள்ளும்படியாக உள்ள ஒரு பூச்சை அந்தத் தூசிகள் ஏற்படுத்துகின்றன.