Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 367)
Paththati 13 - பராக பத்ததி
ஆபாதவல்லவதநோ அகுமாரயூந: பாதாவநி ப்ரவிசதோ யமுநா நிகுஞ்ஜாந் ஆஸீத் அநங்கஸமராத் புரத: ப்ரவ்ருத்த: ஸேநாபராக இவ தே பதவீபராக:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காண்பதற்குக் குழந்தை போன்று உள்ளவனும், உண்மையில் இது போன்ற பருவங்கள் ஏதும் அற்றவனும் ஆகிய பரமபுருஷனாகிய கண்ணன், ராஸலீலைக்காக யமுனை ஆற்றின் கரைக்கு வந்தான். அப்போது உன்னிடமிருந்து தூசிகள் பறந்தன. இவற்றைக் காணும்போது, நடக்க உள்ள மன்மத யுத்தத்திற்கு முன்பாக சேனை கிளம்புவது போன்று உள்ளது.