Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 366)

Paththati 13 - பராக பத்ததி

நேதீயஸாம் நிஜபராக நிவேச பூர்வம் ஸ்ப்ருஷ்ட்வா சிராம்ஸி பவதீ பவரோக பாஜாம் காடம் நிபீட்ய கருடத்வஜ பாதரக்ஷே மாநக்ரஹம் சமயதீவ பரைரஸாத்யம்

கருடனைக் கொடியில் உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸம்ஸாரம் என்ற நோயால் பீடிக்கப்பட்டவர்களின் தலைகள் உன் அருகில் வந்தவுடன், உன் மீது உள்ள தூசிகளை முதலில் அந்தத் தலைகள் மீது படியச் செய்கிறாய். பின்னர் அவற்றைத் தொட்டு, (சடாரி) அழுத்தமாகப் பிடித்துக் கொள்கிறாய். இதன் மூலம் யாராலும் ஓட்ட இயலாத அஹங்காரம் என்ற பிசாசை நீ ஓட்டிவிடுகிறாய்.