Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 365)
Paththati 13 - பராக பத்ததி
ரத்யா விஹார ரஹஸா பரிதூஸராங்கீம் ரங்கேச்வரஸ்ய லலிதேஷு மஹோத்ஸவேஷு ப்ரஸ்போடயதி அவநத: மணிபாதுகே த்வாம் கௌரீபதி: ஸவயம் இபாஜின பல்லவேந
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் உத்ஸவ காலங்களில் உன்னைச் சாற்றிக் கொண்டு திருவரங்கத்தின் திருவீதிகளில் ஸஞ்சாரம் செய்கிறான். அப்போது அந்த வீதிகளில் உள்ள புழுதி உன் மீது முழுவதுமாகப் படிந்துவிடுகிறது. இதனைக் கண்ட சிவன், உன்னை வணங்கியபடி, தனது தளிர் போன்ற யானைத்தோல் கொண்டு உன்னைத் துடைத்து வைக்கிறார்.