Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 364)
Paththati 13 - பராக பத்ததி
மூர்த்தாநம் அம்ப முரபிந் மணி பாதரக்ஷே யேஷாம் கதாபி ரஜஸா பவதீ புநாதி த்வாம் ஏவ தே ஸுக்ருதிந: ஸ்நபயந்தி காலே மந்தாரதாம் ரஜஸா மகுட ச்யுதேந
முரன் என்ற அரக்கனை வீழ்த்திய கண்ணனின் திருவடிகளை அவன் தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே! நீ ஒரு சிலரின் தலைகளை உன் மீது உள்ள தூசி கொண்டு தெளித்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக்கூடும். அப்படிப்பட்ட புண்ணிய சாலிகள் சரியான காலம் வந்தவுடன் இந்திரபதவி பெற்று விடுகின்றனர். அப்போது தங்கள் க்ரீடங்களிலுள்ள மந்தார மாலை கொண்டு உன்னை நீராட்டுகின்றனர்.