Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 363)

Paththati 13 - பராக பத்ததி

ஆயோஜிதாநி அமலதீபி: அநந்யலப்யே பாதாவநி ச்ருதி வதூ படவாஸக்ருத்யே த்வத் ஸஞ்சர ப்ரசலிதாநி ரஜாம்ஸி சௌரே: ப்ரக்யாபயந்தி பதபத்ம பராக சோபாம்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னிடமிருந்து கிளம்பும் தூசிகள் அனைத்தும், ஸ்ரீரங்கநாதனின் திருவடித் துளிகள் தவிர மற்ற ஏதும் சென்றடைய இயலாத, வேதங்கள் என்ற பெண்ணுக்கு ஏற்ற வாசனைப் பொடிகளாக உள்ளன. இவ்விதம் மிகவும் கற்றவர்கள் கூறுகிறார்கள். அந்தத் தூசிகள் ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளிலிருந்து கிளம்பும் தூசிகள் என்று கூறுகிறோம்.