Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 362)

Paththati 13 - பராக பத்ததி

மாதர் முகுந்த சரணாவநி தாவகீநா: சிந்தாவசீகரண சூர்ண விசேஷ கல்பா: ஸஞ்சார பாம்ஸுகணிகா: சிரஸா வஹந்தோ விச்வம் புநந்தி பதபத்ம பராகலேசை:

கண்ணனின் திருவடிகளை அவனது தாயான யசோதை போன்று காப்பாற்றும் பாதுகையே! இந்த உலகில் உள்ளவர்களின் மனம் முழுவதும் உன் பக்கம் ஈர்க்கும் வண்ணம் உள்ள சொக்குப் பொடியாக உனது தூசிகள் உள்ளன. அவற்றை ஒரு சிலர் தங்கள் தலைகளில் ஏற்றுக்கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் திருவடித்தூசி மூலமாக அவர்கள் இந்த உலகத்தைத் தூய்மைப்படுத்துகின்றனர்.