Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 361)

Paththati 13 - பராக பத்ததி

மாந்யேந ரங்கந்ருபதே : மணிபாதரக்ஷே சூடாபதாநி ரஜஸா தவ பூஷயந்த: காலக்ரமேண பஜதாம் கமலாஸநத்வம் நாபி ஸரோஜ ரஜஸாம் நிவஸந்தி மத்யே

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மிகவும் பெருமை உடையதும், போற்றத்தக்கதும் ஆகிய உன்னுடைய தூசிகளை ஒரு சிலர் தங்கள் தலையில் ஏற்றுக் கொள்ளக்கூடும். அவர்கள் காலம் கழியக்கழிய வரிசையாக பகவானின் திருநாபிக்கமலத்தில் அமரவல்ல ப்ரம்மபட்டம் அடைகின்றனர்.