Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 360)

Paththati 13 - பராக பத்ததி

ரங்கேசயஸ்ய புருஷஸ்ய ஜகத் விபூத்யை ரத்யா பரிக்ரம விதௌ மணிபாதரக்ஷே ஸீமந்த தேசம் அநவத்ய ஸரஸ்வதீநாம் ஸிந்தூரயந்தி பவதீ சரிதா பராகா:

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! பரமபுருஷனாகிய ஸ்ரீமந்நாராயணன் ஸ்ரீரங்கத்தில் சயனித்தபடி உள்ளான். அவன் இந்த உலகின் நன்மையை மனதில் கொண்டு வீதி வலம் வருகிறான். அப்போது உன்னிடம் இருந்து கிளம்பின தூசிகள், பெண்களின் தலையில் உள்ள வகுடில் வைக்கப்படும் குங்குமம் போன்று மாறின.