Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 359)
Paththati 13 - பராக பத்ததி
தத் ரஜ: தவ தநோதி பாதுகே மாநஸாநி அகடிநாநி தேஹிநாம் ப்ரஸ்தரஸ்ய பதவீக தஸ்ய யத் வ்யாசகார முநிதர்ம தாரதாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய தூசிகளுக்கு மனிதர்களின் மனதை மென்மையாக்கும் தன்மை உண்டு போலும். காரணம் – உனது தூசியினால் இராமன் சென்ற வழியில் இருந்த கல் ஒன்று மஹிரிஷியின் மனைவி என்ற மென்மையாக பெண்ணாக ஆனது அல்லவா?