Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 358)

Paththati 13 - பராக பத்ததி

சுத்தஸ்த்த்வ வபுஷா ஏவ பவத்யா பாதுகே விரஜஸௌ ஹரிபாதௌ அஸ்து கிம் புநரிதம் ரஜஸா தே சுத்த ஸத்த்வமயதா மனுஜாநாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ரஜோகுணம், தமோ குணம் இல்லாத தூய்மையான ஸத்வகுணம் மட்டுமே மேலிட்ட திருமேனி கொண்டவளாக நீ உள்ளாய். உன் காரணமாகவே நம்பெருமாளின் திருவடிகளில் தூசி ஒட்டாமல் உள்ளது. இது ஒருபுறம் இருக்கட்டும். நம்பெருமாள் பின்னே செல்பவர்களுக்கு உனது ரஜஸ் (தூசி) மூலம், அந்த ரஜஸ் (தூசி) அவர்கள் மீது பட்டவுடன், அவர்களது ரஜோ குணம் போய்விடுகிறதே, இது எப்படி? (ரஜஸ் மூலம் ரஜோ குணம் எப்படி நீங்குகிறது என்று வியக்கிறார்)