Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 357)

Paththati 13 - பராக பத்ததி

அதிகம் பதம் ஆச்ரித: அபி வேதா: ப்ரயத: ரங்கதுரீண பாதரக்ஷே அபிவாஞ்சதி ஸங்கமம் பராகை: அபி ஜாதை: தவ தேவி நாபிஜாத:

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ப்ரம்மன் மிகவும் உயர்ந்த பதவியில் உள்ளவனே என்றாலும், அவன் சிறந்த குலப்பெருமை உள்ள உன்னுடைய தூசிகளின் தொடர்பு அடைய விரும்புகிறான் (இதனால்தான் நல்கதி பெறலாம் என்று எண்ணினான்).