Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 356)

Paththati 13 - பராக பத்ததி

க்ருதிந: சிரஸா ஸமுத்வஹந்த: கதிசித் கேசவ பாதுகே ரஜஸ்தே ரஜஸ: தமஸ: அபி தூரபூதம் பரிபச்யந்தி விசுத்தமேவ ஸத்வம்

அழகான கேசத்தைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய துகள்களைத் தங்கள் தலைகளில் கொள்கின்ற புண்ணியம் செய்தவர்களின் நிலை என்ன? அப்படிப்பட்டவர்கள் ரஜோகுணம், தமோகுணம் ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஸத்வகுணம் நிறைந்த பரமபரமபதத்தைக் காண்கின்றனர்.