Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 355)

Paththati 13 - பராக பத்ததி

சிரஸா பரிக்ருஹ்ய லோகபாலா: தவ ரங்கேச்வர பாதுகே ரஜாம்ஸி விஷமேஷு பலேஷு தாநவாநாம் வ்யபநீத அந்யசிரஸ்த்ரம் ஆவிசந்தி

ஸ்ரீரங்கத்தின் நாயகனாகிய திருவரங்கனின் பாதுகையே! இந்திரன் முதலான தேவர்கள் உனது தூசிகளைத் தங்கள் தலைகளில் பூசிக்கொள்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் தங்கள் தலைக்கு எந்தவிதமான கவசமும் அணியாமலேயே அசுரர்களுடன் யுத்தம் செய்யப் புறப்பட்டு, அவர்கள் கூட்டத்தில் புகுந்து விடுகின்றனர்.