Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 353)
Paththati 13 - பராக பத்ததி
புநருக்த பிதாமஹ அனுபாவா: புருஷா: கேசித் அமீ புநந்தி விச்வம் மதுவைரி பதாரவிந்த பந்தோ: அபராகாஸ்தவ பாதுகே பராகை:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மதுசூதனனின் திருவடிகளுடைய பந்துவாக உள்ள உனது தூசிகள், இந்த உலகில் உள்ள சிலர் மீது விழுகின்றன. அப்படிப்பட்டவர்கள் ப்ரம்மபதவி பெறவும் தகுதி உள்ளவர்கள் ஆகின்றனர் என்றாலும், அவர்கள் அதனை விரும்பாமல் உள்ளனர். இப்படிப்பட்ட உயர்ந்தவர்களே இந்தப் பூமியைத் தூய்மைப்படுத்துகின்றனர்.