Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 352)
Paththati 13 - பராக பத்ததி
தவ ஸஞ்சரணாத் ரஜோ விதூதம் யதிதம் ரங்கநரேந்த்ர பாதரக்ஷே அலம் ஏதத் அநாவிலாநி கர்த்தும் கதக க்ஷோத இவாசு மாநஸாநி
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தேத்தாங்கொட்டையின் துகள்கள் தண்ணீரை எவ்விதம் தூய்மைப்படுத்துகின்றனவோ அது போன்று, உனது ஸஞ்சாரத்தின் போது எழும் தூசிகள் மனதைத் தூய்மைப்படுத்திவிடுகின்றன.