Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 351)

Paththati 13 - பராக பத்ததி

பாந்து வ: பத்மநாபஸ்ய பாதுகா கேளிபாம்ஸவ: அஹல்யாதேஹ நிர்மாண பர்யாய பரமாணவ:

அழகான தாமரை மலர் போன்ற திருநாபிக்கமலம் உடைய இராமன் ஸஞ்சாரம் செய்தபோது, அவனது பாதுகைகளில் இருந்து தூசிகள் கிளப்பின. அவை அகலிகையின் உடலை மீண்டும் உண்டாக்கும் பரமாணுக்கள் போன்று தோன்றின. இப்படிப்பட்ட தூசிகள் உங்களையும் காப்பாற்றுவதாக.