Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 349)
Paththati 12 - புஷ்ப பத்ததி
கிம் புஷ்பை: துளஸீ தளை: அபி க்ருதம் தூர்வாபி தூரே ஸ்திதா த்வத் பூஜாஸு முகுந்தபாது க்ருபயா த்வம் காமதேநு: ஸதாம் ப்ரத்யக்ராஹ்ருத தர்ப்பல்லவ தல க்ராஸ அபிலாஷ உந்முகீ தேநு: திஷ்டது ஸா வஸிஷ்ட பவந த்வார உபகண்ட ஸ்தலே
முகுந்தனின் பாதுகையே! உனக்காகச் செய்யப்படும் ஆராதனங்களில் மலர்கள் கொண்டு ஆவது என்ன? துளசிதளங்கள் கூட வேண்டியதில்லை. அருகம் புல் கூட தூரத்தில் வைக்கப்படலாம். இவ்விதம் உன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர்களிடம் எதனையும் எதிர்பாராமல், அவர்களுக்கு உனது கருணை காரணமாக அனைத்தையும் அளிப்பவளாக நீ உள்ளாய். வசிஷ்டரின் காமதேனுப்பசுவும் கூட, புதிதாகக் கொண்டு வரப்பட்ட தளிர் இலைகளுக்காகத் தனது முகத்தை நீட்டியபடி அல்லவா உள்ளது? எதனையும் எதிர்பராமல் உள்ள காமதேனு போன்று நீ உள்ளபோது வசிஷ்டரின் அந்தப் பசுவானது, அவரது வீட்டு வாசலிலேயே இருக்கட்டும் (நீ எங்களுக்கு இருந்தால் போதும்).