Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 348)
Paththati 12 - புஷ்ப பத்ததி
வ்யஞ்ஜந்தி ஏதே விபவம் அநகம் ரஞ்ஜயந்த: ச்ருதீர்ந: ப்ராத்வம் ரங்கக்ஷிதிபதி பதம் பாதுகே தாரயந்த்யா: நாதை: அந்தர் நிஹித நிகமை: நந்ததோத்யாந ப்ருங்கா: திவ்யை: புஷ்பை: ஸ்நபித வபுஷோ தேவி ஸௌஸ்நாதிகா: தே
ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைத் தரித்துக் கொண்டும், தேவலோகத்து மலர்களால் ஸ்நானம் செய்விக்கப்பட்டும் நீ உள்ளாய். அந்த மலர்களில் உள்ள வண்டுகள் செய்யும் ரீங்காரம் உன்னிடம் அவை, “ஸ்நானம் நல்லபடியாக ஆனதா?”, என்று கேட்பது போன்று உள்ளது. இப்படிப்பட்ட நந்தனம் என்ற வண்டுகளின் வேத ஒலிகள் போன்ற நாதம் எங்கள் காதுகளை மகிழவித்தபடி உள்ளது. இவை தோஷம் இல்லாத உனது பெருமையை மேன்மேலும் ப்ரகாசப்படுத்துகின்றன.