Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 347)
Paththati 12 - புஷ்ப பத்ததி
அகளித நிஜ ராகாம் தேவி விஷ்ணோ: பதம் தத் த்ரிபுவந மஹநீயாம் ப்ராப்ய ஸந்த்யாம் இவ த்வாம் பவதி விபுதமுக்தை: ஸ்பஷ்ட தாரா அநுஷங்கம் பரிஸர பதிதை: தே பாரிஜாதப் ப்ரஸூநை:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னிடம் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மிகவும் அன்புடன் உள்ளன. அவனது திருவடிகள் சிவந்த வானம் போன்றுள்ளன. மூன்று உலகில் உள்ளவர்களாலும் வணங்கப்படுகின்றன. நீ ஸந்த்யாகாலம் போன்று உள்ளாய். ஆக அவனது திருவடிகள் உன்னை வந்து அடைகின்றன. ஸந்த்யா காலம் அனைவராலும் தொழத்தக்கது என்பது முறை; அது போன்று உன்னை அனைவரும் தொழுகின்றனர். அந்த இரவுப் பொழுதில் தோன்றும் நட்சத்திரங்கள் போன்று தேவர்கள் உன் மீது சேர்த்த கற்பக மரத்தின் மலர்கள் உள்ளன.