Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 346)
Paththati 12 - புஷ்ப பத்ததி
அகில புவந ரக்ஷா நாடிகாம் தர்சயிஷ்யந் அநிமிஷ தரு புஷ்பை: அர்ச்சிதே ரங்கமத்யே அபிநயம் அநுரூபம் சிக்ஷயதி ஆத்மநா த்வாம் ப்ரதம விஹித லாஸ்ய: பாதுகே ரங்கநாத:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! கற்பக மரத்தின் மலர்கள் கொண்டு ஸ்ரீரங்கம் என்ற நாடகமேடை (ரங்கம் என்றால் நாடகம் நடத்தும் மேடை என்பதாகும்) அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த மேடையில் நாயகனாக ஸ்ரீரங்கநாதன் (நாடக எஜமான்), இந்த உலகத்தினைக் காப்பாற்றுதல் என்ற ஒரு சிறிய நாடகத்தை அரங்கேற்றுகிறான். அதற்காக, தான் ஒரு நாட்டியம் ஆடி, அதற்கான அபிநயம் பிடிக்கும்போது, அவனுக்கு நீ எவ்விதம் செயல்பட வேண்டும் என்று கற்றுத் தருகிறாய் போலும்.