Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 345)
Paththati 12 - புஷ்ப பத்ததி
ப்ரசமயதி ஜநாநாம் ஸஞ்ஜ்வரம் ரங்கபர்த்து: பரிஸர சலிதாநாம் பாதுகே சாமராணாம் அநுதினம் உபயாதை: உத்திதம் திவ்யபுஷ்பை: நிகம பரிமளம் தே நிர்விசந் கந்தவாஹ:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அன்றாடம் தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மலர்கள் உன் மீது பரவப்படுவதால், உன்னிடம் வேதவாசனை எப்போதும் சூழ்ந்துள்ளது. ஸ்ரீரங்கநாதனுக்கு வீசப்படும் சாமரங்களில் இருந்து எழும் காற்றானது, இந்த வேதவாசனையை எடுத்து வந்து, இங்கு உள்ள மக்களின் ஸம்ஸார துன்பத்தை நீக்கி விடுகிறது .