Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 344)
Paththati 12 - புஷ்ப பத்ததி
விதிசிவ புருஹூத ஸ்பர்சிதைர் திவ்யபுஷ்பை: த்வயி ஸஹ நிபதந்த: தத்ததுத்யாந ப்ருங்கா: மதுரிபு பதரக்ஷே மஞ்ஜுபி: ஸ்வைர்நிநாதை: அவிதித பரமார்த்தாந் நூநம் அத்யாபயந்தி
மது என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் பாதுகையே! ப்ரம்மன், சிவன், இந்திரன் முதலானவர்கள் தேவலோக மலர்கள் பலவற்றையும் கொணர்ந்து உனக்குச் சமர்ப்பணம் செய்கின்றனர். அவரவர்களின் பூந்தோட்டங்களில் இருந்த வண்டுகளும், அந்த மலர்களுடன் வந்து விடுகின்றன. அவை ரீங்காரம் செய்தபடி உள்ளன. இதனைக் காணும்போது, அவை உன்னுடைய பெருமையை அறியாதவர்களுக்கு அதனைப் பறை சாற்றி, உண்மையை அறிவிப்பது போல் உள்ளது.