Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 343)
Paththati 12 - புஷ்ப பத்ததி
பரிசரண நியுக்தை: பாதுகே ரங்கபர்த்து: பவந தநய முக்யை: அர்ப்பிதாம் த்வத் ஸமீபே விநத விதி முகேப்ய: நிர்விசேஷாம் த்விரேபா: கதம் அபி விபஜந்தே காஞ்சநீம் பத்மபங்க்திம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனக்குக் கைங்கர்யம் செய்யவேண்டும் என்று சுக்ரீவனால் ஏவப்பட்ட அனுமன் முதலானோர், உன் மீது தங்கமயமான மலர்களை இடுகின்றனர். அதே நேரம் அங்கு வந்த ப்ரம்மன், தனது தாமரை போன்று ஒளி வீசும் முகங்களைத் தாழ்த்தி வணங்குகின்றான். அந்த நேரத்தில் அங்கு வரும் வண்டுகள் ப்ரம்மனின் முகங்கள் எது, தாமரை மலர்கள் எது என்று அறியாமல் வெகு நேரம் சிரமப்பட்டு , பின்னர் கண்டு பிடித்து அறிகின்றன.