Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 342)
Paththati 12 - புஷ்ப பத்ததி
கடயஸி பரிபூர்ணாந் க்ருஷ்ணமேக ப்ரசாரே க்ருதிபி: உபஹ்ருதை: த்வம் கேதகீ கர்ப்ப பத்ரை: வரதநு பரிணாமாத் வாமத: ச்யாமளாநாம் ப்ரணதி ஸமய லக்நாந் பாதுகே மௌளி சந்த்ராந்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீர் கொண்ட மேகம் போன்ற திருமேனி உடைய ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்யப் புறப்படும்போது, புண்ணியம் நிறைந்தவர்களால் வெண்மையான தாழை மடல்கள் உன் மீது சாற்றப்படுகிறது. அப்போது இடது பக்கத்தில் கறுத்த நிறமுள்ள பார்வதியைக் கொண்ட அர்த்தநாரீச்வரன், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் தலை சாய்த்து வணங்குகின்றான். அவன் தலையில் உள்ள பிறைச்சந்திரன் உன் மீது பட்டதால், அந்த தாழை மடல்களின் ஒளியால் முழுச்சந்திரனாகி விடுகிறான்.