Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 341)
Paththati 12 - புஷ்ப பத்ததி
திசி திசி முநிபத்ந்யோ தண்டகாரண்ய பாகே ந ஜஹதி பஹுமாநாத் நூநம் அத்யாபி மூலம் ரகுபதி பதரக்ஷே த்வத் பரிஷ்கார ஹேதோ: அபசித குஸுமாநாம் ஆச்ரமாநோகஹாநாம்
ரகுவம்சத்தின் பதியாக உள்ள இராமனின் பாதுகையே! இராமன் தண்டகாரண்ய வனத்தில் இருந்தபோது, அங்கு இருந்த ரிஷிபத்னிகள், உனக்கு ஏற்ற அலங்காரம் செய்யும் பொருட்டு, அங்கு இருந்த மலர்களில் இருந்து மலர்கள் பறித்து, உனக்குச் சாற்றினர். அந்த மரங்கள் உனக்காக மலர்கள் அளித்தன என்று மரியாதையை மனதில் இன்னமும் நினைத்தபடியே, இன்றளவும் அந்த மரங்களின் அடியில் அமர்ந்துள்ளனர்.