Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 340)
Paththati 12 - புஷ்ப பத்ததி
ப்ராகேவ காஞ்சந பதாவநி புஷ்பவர்ஷாத் ஸம்வர்த்திதே சமித தைத்ய பயை: ஸுரேந்த்ரை: பத்மேக்ஷணஸ்ய பதபத்ம நிவேச லாபே புஷ்ப அபிஷேகம் உசிதம் ப்ரதிபத்யஸே த்வம்
தங்கம் கொண்டு இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் மூலமாக அசுரர்கள் குறித்த பயம் நீங்கப் பெற்ற தேவர்கள், உன்னால் அல்லவோ ஸ்ரீரங்கநாதன் தனது பெரியகோயிலை விட்டு வெளிக்கிளம்பி, அசுரர்களை அழித்தான் என்று என்று எண்ணுகின்றனர். அதனால் அவர்கள் உனக்கு மலர்களைத் தூவி வருகின்றனர். ஆயினும் அதற்கு முன்பாகவே திருவரங்கனின் தாமரை போன்ற திருவடிகள் உன் மீது சாற்றப்பட்டு, உனக்கு ஏற்ற அபிஷேகம் நிறைவேறி விட்டது அல்லவோ (மற்றொரு விதமான பொருள் கூறலாம்) – அசுர பயம் நீங்கிய தேவர்கள், உனக்கு மலர் தூவி தங்கள் தலைகளில் உன்னைத் தாங்கியபடி திருவரங்கனின் முன்பாக எழுந்தருளச் செய்கின்றனர். இப்படியாக அவன் திருவடிகளுக்கு முன்னரே உனக்கு மலர் தூவி அபிஷேகம் நிறைவேற்றப்பட்டது - என்றும் கூறலாம்).