Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 339)

Paththati 12 - புஷ்ப பத்ததி

ரங்கேச பாத பரிபோக ஸுஜாத கந்தாம் ஸம்ப்ராப்ய தேவி பவதீம் ஸஹ திவ்ய புஷ்பை: நித்யம் உபதர்சித ரஸம் ந கில ஆத்ரியந்தே நாபீ ஸரோஜம் அபி நந்தன சஞ்சரீகா:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தேவலோகத்தில் உள்ள வண்டுகள், தேவர்கள் திருவரங்கனின் திருவடிகளில் பொழிகின்ற மலர்களுடன் இணைந்தபடி திருவரங்கம் வந்து சேர்ந்து விடுகின்றன. அவை நறுமணம் வீசும் உன்னிடம் வந்து சேர்ந்து விடுகின்றன. அதன் பின்னர் எப்போதும் தேன் பெருகும் ஸ்ரீரங்கநாதனின் நாபிக் கமலத்தைக் கூட அடைய முனைவது இல்லை.