Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 338)

Paththati 12 - புஷ்ப பத்ததி

நாகௌகஸாம் சமயிதும் பரிபந்திவர்காந் நாதே பதம் த்வயி நிவேசயிதும் ப்ரவ்ருத்தே த்வத் ஸம்ச்ரிதாம் விஜஹத: துளஸீம் வமந்தி ப்ரஸ்தாந காஹள ரவாந் ப்ரதமம் த்விரேபா:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தேவர்களின் விரோதிகளை அழிப்பதற்காக ஸ்ரீரங்கநாதன் தனது திருவடிகளை உன் மீது மெதுவாக வைக்கின்றான். அப்போது உன் மீது சாற்றப்பட்ட துளசி மாலைகளில் உள்ள வண்டுகள் ரீங்காரம் செய்யத் தொடங்குகின்றன. இதனைக் கேட்கும்போது, ஸ்ரீரங்கநாதன் புறப்படுகையில் ஒலிக்கப்படுகின்ற காஹளம் என்ற எக்காளம் போன்று உள்ளது.