Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 337)

Paththati 12 - புஷ்ப பத்ததி

விச்வ உபஸர்க சமநம் த்வயி மந்யமாநை: வைமாநிகை: ப்ரணிஹிதம் மணிபாதரக்ஷே பத்மா ஸஹாய பதபத்ம நக அர்ச்சிஷு: தே புஷ்ப உபாஹார விபவம் புநருக்தயந்தி

இரத்தினக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகிற்கு ஏற்படும் அனைத்து உபத்திரவங்களும் உன்னால் மட்டுமே நீங்கும் என்று தேவர்கள் எண்ணுகின்றனர். ஆகவே அவர்கள் உன்னிடம் மலர்களைச் சமர்ப்பிக்கின்றனர். இந்த மலர்களின் வரிசைகள் அனைத்தும், ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருவடி விரல் நகங்களின் ஒளியால் மேலும் ஒளி பெறுகின்றன.