Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 336)

Paththati 12 - புஷ்ப பத்ததி

தந்யை: த்வயி த்ரிதச ரக்ஷக பாதரக்ஷே புஷ்பாணி காஞ்சநமயாநி ஸமர்ப்பிதாநி விஷ்ரம்ஸிநா விநமதோ கிரிச உத்தமாங்காத் ஆரக்வதேந மிலிதாநி அப்ருதக் பவந்தி

தேவர்களைக் காப்பாற்றும் ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! புண்ணியம் செய்தவர்கள் உன் மீது தங்கத்தால் செய்யப்பட்ட மலர்களை இட்டு வழிபடுகின்றனர். அதே நேரம் உன் மீது சிவனின் தலையில் உள்ள கொன்றை மலர்களும் விழுந்து, இரண்டும் ஒன்றாகின்றன.