Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 335)
Paththati 12 - புஷ்ப பத்ததி
ஆராத்ய நூநம் அஸுரார்த்தந பாதுகே த்வாம் ஆமுஷ்மிகாய விபவாய ஸஹஸ்ரபத்ரை: மந்வந்தரேஷு பரிவர்த்திஷு தேவி மர்த்யா: பர்யாயத: பரிணமந்தி ஸஹஸ்ர நேத்ரா:
அசுரர்களை அழிக்கும் எம்பெருமானின் பாதுகையே! ஸ்வர்க்கம் முதலான உயர்ந்த செல்வங்களை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, ஒரு சிலர் உனக்கு ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யக்கூடும். அவர்கள் தகுந்த காலகட்டங்களில் ஆயிரம் கண்கள் கொண்ட இந்திர பதவியை அடைவது உறுதியே ஆகும்.