Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 334)
Paththati 12 - புஷ்ப பத்ததி
த்வயி அர்ப்பிதாநி மநுஜைர் மணிபாதரக்ஷே தூர்வாங்குராணி ஸுலபாநி அதவா துளஸ்ய: ஸாராதிகா: ஸபதி ரங்கநரேந்த்ர சக்த்யா ஸம்ஸார நாக தமந ஔஷதயோ பவந்தி
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மனிதர்கள் உன் மீது மிகவும் எளிதாகக் கிடைக்கவல்ல அருகம்புல்லையோ அல்லது துளசி இலைகளையோ சாற்றக்கூடும். இவை விஷத்தை முறிக்கவல்ல வைத்தியனாகிய ஸ்ரீரங்கநாதனின் சக்தியால் மிகவும் வீர்யம் அடைந்து, ஸம்ஸாரம் என்ற பாம்புகளையும் அடக்கி விடுகின்றன.