Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 333)

Paththati 12 - புஷ்ப பத்ததி

யே நாம ரங்கந்ருபதேர் மணிபாதுகே த்வாம் அபி அர்ச்சயந்தி கமலை: அதிகர்த்துகாமா: ஆரோபயதீ அவஹிதா நியதி: க்ரமாத் தாந் கல்பாந்தரீய கமலாஸந பத்ரிகாஸு

ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உயர்ந்த பதவி பெற விரும்பும் எண்ணம் உள்ளவர்கள் உன்னைத் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தால் போதுமானது. அந்தப் புண்ணியமானது மிகவும் எச்சரிக்கையுடன் அவர்களின் பெயர்களை ப்ரம்ம பட்டத்திற்கான பட்டியலில் சேர்த்து விடுகிறது. (அதாவது, அவர்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் ப்ரம்ம பதவியை அடைவர்)