Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 332)

Paththati 12 - புஷ்ப பத்ததி

வந்தாரூபி: ஸுரகணை: த்வயி ஸம்ப்ரயுக்தா மாலா விபாதி மதுஸூதன பாதரக்ஷே விக்ராந்த விஷ்ணுபத ஸம்ச்ரய பத்த ஸக்யா பாகீரதீவ பரிரம்பண காங்க்ஷிணீ தே

மது என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் பாதுகையே! உன்னை வணங்கிப் போற்றியபடி உள்ள தேவர்களின் கூட்டங்கள், உன் மீது மலர் மாலைகளைச் சமர்ப்பணம் செய்கின்றனர். அந்த மாலையைப் பார்க்கும்போது, ஸ்ரீரங்கநாதன் த்ரிவிக்ரமனாக உயர்ந்தபோது, அவனது திருவடிகளின் தொடர்பு ஏற்படவேண்டும் என்ற ஆவல் கொண்டு உன்னை கட்டித் தழுவிய கங்கை போன்று உள்ளது.