Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 331)

Paththati 12 - புஷ்ப பத்ததி

அஸ்ப்ருஷ்ட தோஷ பரிமர்சம் அலங்க்யம் அந்யை: ஹஸ்தாபசேயம் அகிலம் புருஷார்த்த வர்கம் சித்ரம் ஜநார்த்தந பதாவநி ஸாதகாநாம் த்வயி அர்ப்பிதா: ஸுமநஸ: ஸஹஸா பலந்தி

ஜனார்த்தனனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னிடம் மலர்களைச் சமர்ப்பணம் செய்பவர்களுக்குக் கிட்டுவது என்ன? எந்தவிதமான தோஷங்களும் இல்லாததும், மற்றவர்களுக்கு எட்டாததும், இவர்களுக்குக் கையினால் பறிக்கக்கூடியதும் ஆகிய உயர்ந்த புருஷார்த்தங்கள் மிகவும் எளிதாகக் கிட்டுகின்றன.