Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 330)

Paththati 12 - புஷ்ப பத்ததி

அர்ச்சந்தி யே மதுபிதோ மணிபாதரக்ஷே பாவாத்மகைரபி பரம் பவதீம் ப்ரஸூநை: மந்தாரதாம ஸுபகை: மகுடை: அஜஸ்ரம் ப்ருந்தாரகா: ஸுரபயந்தி பதம் ததீயம்

மது என்ற அரக்கனை அழித்த க்ருஷ்ணனின் இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! தங்களுடைய மனதின் மூலம் நினைக்கப்பட்ட மலர்கள் மட்டுமே கொண்டு ஒரு சிலர் உன்னை அர்ச்சிக்கக்கூடும். இப்படிப்பட்டவர்களின் திருவடிகளைத் தேவர்கள் தங்கள் தலைகளில் ஏற்கின்றனர். இதன் மூலம் தங்கள் தலைகளில் சூடியுள்ளதும், மந்தாரமலர்கள் நிறைந்ததும் ஆகிய க்ரீடங்கள் கொண்டு நறுமணம் வீசும்படிச் செய்கின்றனர்.