Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 329)

Paththati 12 - புஷ்ப பத்ததி

நிவர்ர்த்தயந்தி தவ யே நிசிதாநி புஷ்பை: வைஹாரிகாணி உபவநாநி வஸுந்தராயாம் காலேந தே கமலலோசந பாதரக்ஷே க்ரீடந்தி நந்தநவநே க்ருதிந: புமாம்ஸ:

தாமரை போன்ற அழகான கண்கள் கொண்ட க்ருஷ்ணனின் பாதுகையே! நீ நடந்து செல்வதற்காக, உனது விளையாட்டிற்காக, இந்த உலகில் ஒரு சிலர் மலர்கள் நிறைந்த தோட்டங்களை உருவாக்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள் நாளடைவில் இந்திரனின் தேவலோக நந்தவனத்தில் விளையாடி மகிழ்கின்றனர் (அதாவது அவர்கள் இந்த்ர பட்டம் அடைகின்றனர்).