Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 328)

Paththati 12 - புஷ்ப பத்ததி

பத்ராணி ரங்கந்ருபதேர் மணிபாதரக்ஷே த்வத்ராண்யபி த்வயி ஸமர்ப்ய விபூதிகாமா: பர்யாய லப்த புருஹூதபதா: சசீநாம் பத்ராங்குராணி விலிகந்தி பயோதரேஷு

இரத்தினக்கற்களால் பதிக்கப் பெற்ற பாதுகையே! உயர்ந்த ஐச்வர்யம் விரும்புவர்கள் இரண்டு அல்லது மூன்று துளசி இலைகளை உன்னிடம் சமர்ப்பித்து விட்டால் போதுமானது. அவர்கள் வரிசையாக நின்று அடைய வேண்டிய இந்திர பதவியை நேரடியாகவே அடைந்து விடுகின்றனர். இந்த்ராணிகளின் ஸ்தனங்களில் ஓவியம் தீட்டும் நிலையை அடைகின்றனர்.