Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 327)
Paththati 12 - புஷ்ப பத்ததி
நிவேசிதாம் ரங்கபதே: பதாப்ஜே மந்யே ஸபர்யாம் மணி பாதரக்ஷே த்வத் அர்ப்பணாத் ஆபதிதாம் அபச்யத் காண்டீவதந்வா கிரிசோத்தமாங்கே
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! காண்டீபம் என்ற வில்லை உடைய அர்ஜுனன், ஸ்ரீரங்கநாதனாகிய க்ருஷ்ணனின் தாமரை போன்ற திருவடிகளில் மலர்களை இட்டான். இவை சிவன் தலையில் உள்ளதைக் கண்டான். இதன் மூலம் நான் நினைப்பது என்னவென்றால் – உன்னைச் சிவன் தனது தலையில் சூட்டிக்கொண்டபோது, அந்த மலர்கள் அங்கு வந்திருக்க வேண்டும் – என்பதாகும்.