Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 326)

Paththati 12 - புஷ்ப பத்ததி

தவைவ ரங்கேச்வர பாதரக்ஷே ஸௌபாக்யம் அவ்யாஹதம் ஆப்துகாமா: ஸுரத்ருமாணாம் ப்ரஸவை: ஸுஜாதை: அப்யர்ச்சயந்தி அப்ஸரஸோ முஹு: த்வாம்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! எந்தக் காலத்திலும் குறைவு என்பதே இல்லாத உன்னைப் போன்ற நிலை, தங்களுக்கும் ஏற்பட வேண்டும் என்று அப்ஸரஸ் பெண்கள் நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் கற்பக மரத்தின் மலர்கள் கொண்டு உன்னை அர்ச்சித்தபடி உள்ளனர்.