Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 325)
Paththati 12 - புஷ்ப பத்ததி
பதே பரஸ்மிந் புவநே விதாது: புண்யை: ப்ரஸூநை: புளிநே ஸரய்வா: மத்யே ச பாதாவநி ஸஹ்யஸிந்தோ ஆஸீத் சது: ஸ்தாநமிவ அர்ச்சநம் தே
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனக்குப் பரமபதம், ப்ரம்மனின் ஸத்ய லோகம், ஸரயு நதியின் கரையில் உள்ள அயோத்தி மற்றும் காவேரியின் நடுவில் உள்ள திருவரங்கம் ஆகிய நான்கு இடங்களிலும் மலர்கள் கொண்டு அர்ச்சனம் நடைபெறுகிறது. இது எம்பெருமானுக்கு நான்கு இடங்களில் (கும்பம், அக்னி, ஸ்தண்டிலம், பிம்பம்) நடைபெறும் அர்ச்சனம் போன்றுள்ளது