Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 324)

Paththati 12 - புஷ்ப பத்ததி

குஸுமேஷு ஸமர்ப்பிதேஷு பக்தை: த்வயி ரங்கேச பதாவநி ப்ரதீம: சடகோபமுநே: த்வத் ஏகநாம்ந: ஸுபகம் யத் ஸுரபி த்வம் அஸ்ய நித்யம்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னிடம் பக்தர்கள் மலர்களைச் சாற்றியபடி உள்ளனர். உன்னுடைய திருநாமத்தைக் கொண்ட நம்மாழ்வாருக்கு எத்தகைய நறுமணம் (மகிழம்பூ நறுமணம்) உள்ளதோ, அதனை உன்னிடம் இப்போது காண்கிறோம்.