Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 323)
Paththati 12 - புஷ்ப பத்ததி
தவ ரங்கராஜ மணிபாது நதோ விஹிதார்ஹண: ஸுரஸரித்பயஸா அவதம்ஸ சந்த்ரகலயா கிரிசோ நவ கேதகீதளம் இவ அர்ப்பயதி
ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! சிவன் தனது தலையில் உள்ள கங்கை நீரைக் கொண்டு உனக்கு அர்க்யம் அளிக்கிறார். தனது தலையில் உள்ள பிறைச்சந்திரன் மூலம் அழகாக அமைந்துள்ள தாழம்பூவை உனக்கு அளிக்கின்றார்.