Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 322)

Paththati 12 - புஷ்ப பத்ததி

தைவதம் மம ஜகத்ரய அர்ச்சிதா திவ்யதம்பதி விஹார பாதுகா பாணிபாத கமல அர்ப்பணாத் தயோ: யா பஜத்யநுதினம் ஸபாஜனம்

மூன்று உலகங்களாலும் வணங்கப்படுகிற ஸ்ரீரங்கநாச்சியாரும் ஸ்ரீரங்கநாதனும் தங்கள் திருக்கரங்கள் மற்றும் திருவடிகள் என்ற தாமரை மலர்கள் கொண்டு பாதுகையை அன்றாடம் பூஜித்து வருகின்றனர். இப்படிப்பட்ட பாதுகை எனக்கு மட்டும் இன்றி அனைவராலும் வணங்கத்தகுந்தது ஆகும்.