Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 321)

Paththati 12 - புஷ்ப பத்ததி

சௌரே: ஸஞ்சார காலேஷு புஷ்பவ்ருஷ்டி: திவ: ச்யுதா பர்யவஸ்யதி யத்ர ஏவ ப்ரபத்யே தாம் பதாவநீம்

திருவரங்கன் ஸஞ்சாரம் செய்யும்போது அவன் மீது பூமாரி பொழிந்தபடி உள்ளது. இத்தகைய மலர்கள் அவனது திருவடிகளில் உள்ள பாதுகையைச் சென்று அடைகின்றன. அத்தகைய பாதுகையை நான் சரணம் அடைகிறேன்.