Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 320)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
ஸம்பவது பாதரக்ஷே ஸத்ய ஸுபர்ண: ஆதி: ஔபவாஹ்ய கண: யாத்ராஸு ரங்கபர்த்து: ப்ரதம பரிஸ்பந்த காரணம் பவதீ
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் சஞ்சாரம் செல்வதற்கு அவனுக்கு வாகனங்களாக ஸத்யன், கருடன் என்று பலரும் இருக்கக்கூடும். ஆனால் இவர்களுக்கு முன்பாக அவன் முதல் அடி எடுத்து வைப்பதற்கு நீ அல்லவோ காரணமாக உள்ளாய்?